விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Update: 2023-07-17 20:04 GMT

ஓமலூர்:-

சேலம் எஸ்.கொல்லப்பட்டி வட்டமுத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 34). இவருடைய மனைவி லோகேஸ்வரி. இவர்களுக்கு பிரித்திகாஸ்ரீ (6) என்ற மகளும், நிரஞ்சன் என்ற 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். முருகன் ஆட்டோவில் சிலிண்டர் வீடு, வீடாக சென்று சிலிண்டர் வினியோகம் செய்து வந்தார். இதற்கிடையே முருகன், விஷம் குடித்து விட்டு ஓமலூர்- சேலம் ரெயில்வே தண்டவாளம் பகுதியில் விஷம் குடித்து விட்டு ஆட்டோவில் படுத்து இருப்பதாக தன்னுடைய அண்ணன் மனைவி பூங்கொடிக்கு போன் செய்து தகவல் கூறியுள்ளார். உடனே உறவினர்கள் முருகனை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் தொழிலாளி முருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்