குண்டர் தடுப்பு சட்டத்தில் தொழிலாளி கைது

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-29 19:45 GMT

மேட்டுப்பாளையம்


சிறுமுகை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி மணிகண்டன் (வயது 30) என்பவரை மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராய ணன் பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மணிகண்டன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகல் மணிகண்டனிடம் வழங்கப்பட்டது.

இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கூறுகை யில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடு பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும்.

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 8 போக்சோ குற்றவாளிகள் உட்பட 26 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.


மேலும் செய்திகள்