வாலிபர் கொலையில் தொழிலாளி கைது

பணகுடியில் வாலிபர் கொலையில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-09 22:57 GMT

பணகுடி:

பணகுடியில் வாலிபர் கொலையில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

வாலிபர் கொலை

நெல்லை மாவட்டம் பணகுடி மங்கம்மாள் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராமன் மகன் பசுபதி (வயது 23). லோடு ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 7-ந் தேதி இரவில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் திடீரென்று பசுபதியிடம் தகராறு செய்து, அடித்துக்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையிலான தனிப்படையினர் மர்ம நபரை தேடிவந்தனர்.

தொழிலாளி கைது

இந்த நிலையில் பணகுடி அண்ணாநகர் கோவில்விளை பகுதியைச் சேர்ந்த ஆடுமேய்க்கும் தொழிலாளியான கணேசன் (59) என்பவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, பசுபதியை கொலை செய்ததை கணேசன் ஒப்புக்கொண்டார். அதாவது, கணேசனிடம் பசுபதி ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அந்த பணத்தை அவர் திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது. சம்பவத்தன்று பசுபதி வேலையை முடித்துவிட்டு வந்த போது கணேசன் பணத்தை திருப்பி கேட்டார். அப்போது, ஏற்பட்ட தகராறில் பசுபதியின் கழுத்தை துண்டால் இறுக்கியும், கல்லால் தாக்கியும் கணேசன் கொலை செய்துள்ளார்.

மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பணகுடி போலீசார், கணேசனை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்