குண்டர் சட்டத்தில் தொழிலாளி கைது

குண்டர் சட்டத்தில் தொழிலாளி கைது

Update: 2023-04-25 18:45 GMT

நாகர்கோவில், 

திக்கணங்கோடு தாரவிளையை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 46), தொழிலாளி. இவர் மீது இரணியல் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. எனினும் போலீசார் எச்சரிக்கையை மீறி ஜெயபால் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். இதற்கான அனுமதி கோரி கலெக்டர் பி.என்.ஸ்ரீதருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பரிந்துரை செய்தார். இதற்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இரணியல் போலீசார் நேற்று ஜெயபாலை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

----

Tags:    

மேலும் செய்திகள்