கையில் அரிவாளுடன் சமூகவலைதளத்தில் பதிவிட்ட தொழிலாளி கைது
மூலைக்கரைப்பட்டி அருகே கையில் அரிவாளுடன் சமூகவலைதளத்தில் பதிவிட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.;
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள நாச்சான்குளம் மேலூரை சேர்ந்தவர் வேலாயுதம் என்பவருடைய மகன் குமரேசன் (வயது 22). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரிய அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வீடியோ மற்றும் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஐசக் வழக்குப்பதிவு செய்து குமரேசனை கைது செய்தார்.