அரசு பஸ் மீது கல்வீசி தாக்கிய தொழிலாளி கைது

தூத்துக்குடி அருகே அரசு பஸ் மீது கல்வீசி தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-21 18:45 GMT

தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டை வழியாக ஏரலுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சில் ஏரல் அருகே உள்ள பண்டாரவிளையைச் சேர்ந்த லிங்கப்பாண்டி (வயது 38) என்பவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு ஏரலில் இருந்து தூத்துக்குடி நோக்கி பஸ்சை ஓட்டி வந்தார். பஸ் தூத்துக்குடி 3-வது மைல் பாலம் அருகே வந்த போது, திடீரென மர்ம நபர் ஒருவர் பஸ் மீது கல்வீசி தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சேதம் அடைந்தது.

இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆறுமுகநேரியை சேர்ந்த கூலித் தொழிலாளி மாடசாமி (40) என்பவர் குடிபோதையில் பஸ் மீது கல்வீசி தாக்கி இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மாடசாமியை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்