வால்பாறையில் குடிபோதையில் ரகளை செய்த தொழிலாளி கைது
வால்பாறையில் குடிபோதையில் ரகளை செய்த தொழிலாளி கைது
வால்பாறை
வால்பாறை எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த மரவேலை தொழிலாளி வின்சென்ட் (வயது 37). இவர் குடிபோதையில் காந்தி சிலை பஸ் நிறுத்தம் பகுதி மற்றும் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் பொது மக்களிடம் ரகளை செய்துள்ளார். மேலும் வீடுகளுக்கு குடி தண்ணீர் விநியோகம் செய்யும் குடிதண்ணீர் குழாயையும் சேதப்படுத்தியுள்ளார்.இது குறித்து தட்டிக் கேட்டவர்களை தகாத வார்த்தையில் திட்டி கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். மேலும் அரை குறை ஆடையுடன் அரை நிர்வாண கோலத்தில் நின்று பெண்களை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்ததும் வால்பாறை போலீசார் அங்கு சென்று குடிபோதையில் ரகளை செய்து பொது சொத்தை சேதப்படுத்தியதாக விண்சென்டை கைது செய்தனர்.