பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது
தேனி அருகே பெண்ணை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.;
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி தந்தை பெரியார் தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 37). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த செல்வம் மகன் கவுதமிடம் செல்போன் வாங்கி பேசியுள்ளார். அதற்கு பிறகு கவுதமின் செல்போனுக்கு தேவையற்ற அழைப்புகள் அடிக்கடி வந்துள்ளன. இதுகுறித்து கவுதமின் தாய் பாக்கியலட்சுமி (47), பிரபுவிடம் கேட்டுள்ளார். இதனால், அவரை பிரபு ஆபாசமாக பேசி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர்.