பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது

சாணார்பட்டி அருகே பெண்ணை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-18 18:45 GMT

சாணார்பட்டி அருகே உள்ள கொழிஞ்சிபட்டியைச் சேர்ந்தவர் நவநீதன் (வயது 30). கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் காமக்காள் (55). இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக நவநீதன், காமக்காளுடன் தகராறு செய்தார். அப்போது அவர் காமக்காளை தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சாணார்பட்டி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் வழக்குப்பதிவு செய்து நவநீதனை கைது செய்தார்.


Tags:    

மேலும் செய்திகள்