பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது
கொடைரோடு அருகே பெண்ணை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கொடைரோடு அருகே உள்ள மாலையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் மணிராஜா (வயது 41). அவருடைய மனைவி முனியம்மாள் (37). சம்பவத்தன்று இவர், தனது வீட்டின் முன்பு சாலையில் நடந்து சென்றார். அப்போது அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளியான வீரசின்னன் (26) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து, முனியம்மாள் மீது மோதுவது போல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவரை முனியம்மாள் கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த வீரசின்னன், முனியம்மாளை தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் முனியம்மாள் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரசின்னனை கைது செய்தனர்.