மதுகுடிக்க டம்ளர் தர மறுத்த டீக்கடைக்காரரை தாக்கிய தொழிலாளி கைது

நெல்லையில் மது குடிக்க டம்ளர் தராத டீக்கடைக்காரரை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-22 21:53 GMT

நெல்லை டவுன் தொண்டர் சன்னதி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று அதிகாலையில் வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளியான மாரி என்ற மாரியப்பன் (வயது 39) என்பவர் டீக்கடைக்கு வந்தார். அவர், மது குடிக்க வேண்டும் என்று பாட்டிலை எடுத்து டம்ளர் தரும்படி சுப்பையாவிடம் கேட்டார்.

அதற்கு சுப்பையா டீக்கடையில் வைத்து மது அருந்த கூடாது என்று கூறியதுடன் டம்ளர் கொடுக்கவும் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மாரியப்பன் டீக்கடைக்குள் புகுந்து சுப்பையாவை சரமாரியாக தாக்கினார். உடனே அங்கிருந்த சிலர் மாரியப்பனை சமாதானப்படுத்தி வெளியே அனுப்பினர்.

இதுகுறித்து சுப்பையா நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தார். டீக்கடைக்குள் புகுந்து சுப்பையாவை மாரியப்பன் தாக்கிய காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

Tags:    

மேலும் செய்திகள்