அரசு பஸ் கண்ணாடி உடைத்த தொழிலாளி கைது

பரமத்திவேலூரில் அரசு பஸ் கண்ணாடி உடைத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-18 19:01 GMT

பரமத்திவேலூர்

ஜேடர்பாளையம், சந்தைபேட்டை தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது57) கூலித்தொழிலாளி. இவர் குடிபோதையில் ஜேடர்பாளையம் நான்கு ரோட்டில் பொதுமக்களுக்கும், சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறாகவும் இருந்துள்ளார். அப்போது பரமத்திவேலூரில் இருந்து ஈரோடு நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தநிலையில் ஜேடர்பாளையம் நான்கு ரோடு அருகே வந்த அந்த பஸ்சை அவர் தடுத்து நிறுத்தி உள்ளார். மேலும் கல்லால் அரசு பஸ்சின் முன் பக்க கண்ணாடியை அடித்து உடைத்துள்ளார். இது குறித்து அரசு பஸ் டிரைவர் சுந்தராஜன் மற்றும் கண்டக்டர் செல்வராஜ் ஆகியோர் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்