போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
பாலியல் தொல்லை
மயிலாடுதுறை அருகே மேமாத்தூர்- கூடலூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சித்ரவேல். இவருடைய மகன் அருள்தாஸ்(வயது38). விவசாய கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று, 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி கூச்சலிட்டதால் அருள்தாஸ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
கைது
இது குறித்து சிறுமியின் தாய் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.இதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா விசாரணை நடத்தினார். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்தாசை கைது செய்து மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.