தொழிலாளியை ஆட்டோவில் கடத்தி தாக்குதல்

தொழிலாளியை ஆட்டோவில் கடத்தி தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update: 2022-06-26 17:32 GMT

நெல்லை பேட்டையைச் சேர்ந்தவர் செய்யது முகமதுகனி (வயது28). இவர் மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவில் இவர் வேலையை முடித்து வந்தபோது ஒரு மர்மகும்பல் ஆட்டோவில் கடத்திச்சென்று, காட்டுப் பகுதியில் வைத்து அடித்து உதைத்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் மற்றும் சிவந்திபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்