மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி

ஊத்தங்கரை அருகே மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2023-02-24 18:45 GMT

ஊத்தங்கரை

ஊத்தங்கரையை அடுத்த இனாம்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் சிவராமன் (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் மோட்டார்சைக்கிளில் செங்கழிநீர்ப்பட்டி பிரிவு சாலை அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சிவராமனை அங்கிருந்தவர்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்