நாட்டுப்புற கலைஞர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

நாட்டுப்புற கலைஞர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.;

Update: 2022-12-04 18:50 GMT

காரியாபட்டி, 

காரியாபட்டியில் தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறை மற்றும் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி சார்பாக நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தோடும், கலை செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் தமிழக அரசின் உத்தரவின் பேரில் நாட்டுப்புற கலைஞர்கள் கணக்கெடுக்கும் பணி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் காரியாபட்டி சப்- இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமை வகித்தார். தேவாங்கர் கல்லூரியின் முதல்வர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் ஸ்டீபன் பொன்னையா, உதவி பேராசிரியர் கந்தசாமி, நாதஸ்வர கலைஞர் ரவிச்சந்திரன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த நாட்டுப்புற கலைஞர்கள் கணக்கெடுக்கும் சிறப்பு முகாமில் காரியாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த ஏராளமான நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்