கூடலூர்-ஓவேலி சாலையை விரிவுபடுத்தும் பணி தொடக்கம்

போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடலூர்-ஓவேலி சாலையை விரிவுபடுத்தும் பணியை தொடங்கி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2023-03-30 18:45 GMT

கூடலூர்

போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடலூர்-ஓவேலி சாலையை விரிவுபடுத்தும் பணியை தொடங்கி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசல்

கூடலூரில் இருந்து ஓவேலி பேரூராட்சிக்கு சாலை செல்கிறது. இந்த சாலையோரம் நகராட்சி அலுவலகம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, அரசு மாணவ-மாணவிகள் விடுதிகள், தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகியவை உள்ளது. இதனால் அந்த வழியாக தினமும் காலை, மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் நடந்து செல்கின்றனர். மேலும் ஓவேலி பகுதி மக்களும் அத்தியாவசிய பணிகள் மற்றும் அடிப்படை தேவைகளுக்காக பஸ் மற்றும் வாகனங்களில் அந்த சாலை வழியாக கூடலூருக்கு வந்து செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சாலையாக விளங்குகிறது.

சாலை விரிவாக்கம்

ஆனால் போதிய அகலம் இல்லாததால், பள்ளிக்கூட நேரத்தில் அந்த வழியாக மாணவர்கள் நடந்து செல்லும்போது, வாகனங்களில் சிக்கி காயமடையும் நிலை உள்ளது. மேலும் வாகன விபத்துகளும் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே சாைலயை விரிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து கூடலூர்-ஓவேலி சாலையில் வனத்துறை சோதனைச்சாவடி வரை சாலை விரிவாக்க பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். இதனால் பொதுமக்கள், மாணவர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். தொடர்ந்து பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்