மக்காச்சோளத்தில் களை எடுக்கும் பணி தீவிரம்

ஆலங்குளம் பகுதியில் மக்காச்சோளத்தில் களை எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-09-12 21:10 GMT

ஆலங்குளம்,

ஆலங்குளம் பகுதியில் மக்காச்சோளத்தில் களை எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மக்காச்சோளம் சாகுபடி

ஆலங்குளம், தொம்பகுளம். ரெட்டியபட்டி, கொங்கன்குளம், கரிசல்குளம், சாமிநாதபுரம், நல்லக்கம்மாள்புரம், சங்கரமூர்த்திபட்டி, நரிக்குளம், மேலாண்மறைநாடு, செல்லம்பட்டி, கோட்டைபட்டி, அப்பயநாயக்கர்பட்டி, வலையபட்டி, கண்மாய்பட்டி, சுண்டங்குளம், ஏ.லட்சுமிபுரம், கீழாண்மறைநாடு, புளியடிபட்டி, கோபாலபுரம், முத்துச்சாமிபுரம், குண்டாயிர்ப்பு, எட்டக்காபட்டி, இ.டி.ரெட்டியபட்டி, எதிர்கோட்டை, காக்கிவாடன்பட்டி, நதிக்குடி, மம்சாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

இந்த கிராமத்தில் 2 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான நிலத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்து உள்ளனர்.

களை எடுக்கும் பணி

கிணற்று பாசனம் மூலம் சாகுபடி செய்யப்பட்ட சோளமானது தற்போது நன்கு முளைத்து வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

ஆலங்குளம் பகுதியில் எண்ணற்ற விவசாயிகள் மக்காச்சோளத்தை சாகுபடி செய்துள்ளனர். மானாவாரியில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோள விதைகள் முளைக்காமல் கருகிவிட்டன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்ேபாது கிணற்று பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்ட சோளமானது நன்கு முைளத்து வருகிறது. இது விவசாயிகளுக்கு சற்று ஆறுதலை அளிக்கிறது.

தற்போது மக்காச்சோள பயிர்களில் களை எடுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தொடர்ந்து மக்காச்சோளத்தில் விளைச்சல் அதிகம் பெற விவசாயிகள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் வயல்களில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்