கர்ப்பிணிகளை கணக்கெடுக்கும் பணி தீவிரம்

திருக்கோவிலூர் நகராட்சி பகுதிகளில் கர்ப்பிணிகளை கணக்கெடுக்கும் பணி தீவிரம் நடைபெறுகிறது.;

Update:2023-08-27 00:15 IST

திருக்கோவிலூர், 

தமிழக அரசின் உத்தரவுக்கிணங்க திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணிகள் குறித்து கணக்கெடுக்கும் பணி திருக்கோவிலூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மூர்த்தி தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் திருக்கோவிலூர் நகர சுகாதார ஆய்வாளர் மணிகண்டன், சுகாதார செவிலியர் அலுவலர் பூங்கொடி ஆகியோர் மேற்பார்வையில், நர்சிங் கல்லூரி மாணவிகள் 30 பேர், ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் 10 பேர் என மொத்தம் 40 பேர் கொண்ட குழுவினர் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் கர்ப்பிணி பெண்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டவர்களை நகராட்சி அலுவலகத்தில் சந்தித்த ஆணையாளர் கீதா, அரசின் திட்டங்கள் அடித்தட்டு மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. எனவே கர்ப்பிணிகள் குறித்த கணக்கெடுப்பை சரியான முறையில் செய்து அதன் தொடர்ச்சியாக அரசின் மூலம் வழங்கப்படும் உதவிகள் மற்றும் உணவு முறைகள் குறித்தும் சரியான முறையில் கர்ப்பிணிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்