மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தீவிரம்

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-12-05 19:26 GMT

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசின் அறிவுறுத்தலின்பேரில் பலரும் மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் வருகிற 31-ந் தேதி வரை மின்வாரிய அலுவலகங்களில் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைத்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் 11 பிரிவுகளிலும், கண்டோன்மெண்ட், பொன்நகர், ஜங்ஷன் ஆகிய பிரிவு அலுவலகங்களிலும் 14 பிரிவு அலுவலகங்களில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வசதி செய்யப்பட்டு, இணைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து திருச்சி தென்னூர் மின் வாரிய அலுவலகத்தில் இதற்காக அமைக்கப்பட்ட பிரத்யேக கவுண்ட்டர்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள். இந்த பணியை தென்னூர் மின்வாரிய அலுவலக செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்