தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்காக வடமாநில இளம்பெண்கள் 800 பேர் வருகை

Update: 2022-09-29 18:45 GMT

ஓசூர்:

ஓசூர் அருகே கெலமங்கலத்தில் தனியாருக்கு சொந்தமான செல்போன் உதிரி பாகங்கள் தயார் செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் வேலை செய்வதற்காக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் இந்த தொழிற்சாலையில் வேலை செய்வதற்காக ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து 800-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் நேற்று அழைத்து வரப்பட்டனர். அவர்கள் ஜார்கண்ட் மாநிலம் ஹடியா ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை ஓசூருக்கு சிறப்பு ரெயில் மூலம் வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் தனியார் தொழிற்சாலையால் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்கள் மூலம் அழைத்து செல்லப்பட்டனர். ஒரே ரெயிலில் 800-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஓசூர் ரெயில் நிலையம் வந்ததால், அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. 

மேலும் செய்திகள்