தமிழக அரசை கண்டித்து பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-20 18:30 GMT

பெரம்பலூர் மாவட்ட பா.ஜனதா மகளிர் அணி சார்பில் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மகளிர் அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் மகாலெட்சுமி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் மகளிர் அணியினர் கள்ள சாராயம் குடித்து பொதுமக்கள் இறந்ததற்கு தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு தான் காரணம் என்று கூறி, தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்னும் 15 நாட்களுக்குள் ஒரு டாஸ்மாக் கடையையாவது மூடவில்லை என்றால் பெண்களை திரட்டி தேசிய நெடுஞ்சாலையில் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும், என்று கட்சியினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்