மகளிர் உரிமைத்தொகை: இதுவரை 91 லட்சத்து 36 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம்
மகளிர் உரிமைத்தொகை பெற இதுவரை 91 லட்சத்து 36 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 15-ந் தேதி முதல், குடும்ப தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான விண்ணப்பபடிவம் கடந்த வாரத்தில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகை பெற இதுவரை 91 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டுள்ளது. கடந்த 20ந்தேதி முதல் 80% விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 36,000 இடங்களில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.