ரேஷன்கடை கட்டுவதை இடமாற்றம் செய்யக்கோரி பெண்கள் போராட்டம்
காப்புக்காட்டையொட்டி ரேஷன்கடை கட்டுவதை இடமாற்றம் செய்யக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
கலசபாக்கம்
காப்புக்காட்டையொட்டி ரேஷன்கடை கட்டுவதை இடமாற்றம் செய்யக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழுதடைந்த கட்டிடங்கள்
துரிஞ்சாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுமல்லவாடி ஊராட்சியில் கடந்த 40 வருடத்திற்கு முன் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் அங்கன்வாடி மைய கட்டிடம் ஆகியவைகள் பழுது அடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது.இதனை கடந்த மாதம் ஆய்வு செய்த அதிகாரிகள் இடிக்க உத்தரவிட்டதையடுத்து கட்டிங்கள் தரைமட்டமாக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிதாக ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி மையம் கட்டிடங்கள் கட்ட அதிகாரிகள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர்.
இதில் ரேஷன் கடை கட்டிடம் கட்ட பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ள இடத்தை தேர்வு செய்துள்ளார் இருப்பினும் அந்த இடம் கோவிலுக்கு சொந்தமான இடம் ஆகும் அதில் ரேஷன் கடை கட்டிடம் கட்டக் கூடாது என சிலர் கூறியுள்ளனர்.
இதனால் சொரகுளத்தூர் காப்புக்காடு அருகே பஞ்சாயத்துக்கு சொந்தமான இடத்தில் ரேஷன் கடை கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது.இதற்கு அந்த கிராம பெண்கள், ஊரின் .மையத்தில் கட்டினால் நாம் பொருட்கள் வாங்குவதற்கு சுலபமாக இருக்கும். இதனை விட்டுவிட்டு காப்புக்காட்டின் ஓரம் கட்டினால் பாதுகாப்பாக இருக்காது என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
முற்றுகை
இதனையடுத்து சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் மனு அளித்தனர்.
அப்போது பிடிஓ ரேஷன் கடை கட்டிடம் மற்றும் அங்கன்வாடி மையக் கட்டிடம் இரண்டையும் கிராமத்தின் மையப் பகுதியிலேயே கட்ட வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவருக்கு அறிவுறுத்தி உள்ளேன்.
மேலும் கோவிலுக்கு சொந்தமான இடம் என்பது தவறு ஆணையாளரின் பெயரில் அந்த இடம் உள்ளது. எனவே ஊரின் மைய்பகுதியில் ரேஷன் கடை கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
இதன் பின்னர் பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.