மாநகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சேலம் மாநகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.;

Update: 2023-04-03 20:44 GMT

சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலம் 47-வது வார்டு முருகன் நகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் சாலை அமைக்கும் பணிக்காக அங்கிருந்த 10 பொது குடிநீர் குழாய்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வந்தனர். அங்குள்ள பெண்கள் குடிநீர் கேட்டு நேற்று காலை காலிக்குடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 47-வது வார்டு முருகன் நகர் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். பின்னர் பெண்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்