மகளிா் உரிமை தொகை திட்டம்: சிறப்பு முகாம் இன்றுடன் நிறைவு

ஆகஸ்ட் இறுதிக்குள் விண்ணப்பங்கள் அனைத்தையும் பரிசீலனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது

Update: 2023-08-20 03:33 GMT

சென்னை,

பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் முக்கிய பணிகள் வேகமெடுத்துள்ளன. முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்டு 4ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட விண்ணப்ப முகாம் ஆகஸ்டு 5 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலும் நடைபெற்றது

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற முகாம்களில் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்ட்டது..

விடுப்பட்டவர்களுக்குகாக கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் மூன்று நாள் சிறப்பு முகாம் தொடங்கப்பட்ட நிலையில் இன்றுடன்  நிறைவடைய உள்ளது.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக இதுவரை 1.54 கோடி பெண்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்பது குறித்த விவரம், கைப்பேசி குறுஞ்செய்தி மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும்.. ஆகஸ்ட் இறுதிக்குள் விண்ணப்பங்கள் அனைத்தையும் பரிசீலனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்