100 நாள் வேலை வழங்காததைகண்டித்து பெண்கள் போராட்டம்
100 நாள் வேலை வழங்காததைகண்டித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கந்தர்வகோட்டை அருகே சொக்கம்பேட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 5-வது வார்டு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை கடந்த 3 மாதங்களுக்கு முன் வழங்கப்பட்டது. ஆனால் தற்பொழுது வரை 100 நாள் வேலை வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் 50 பேர் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஒன்றிய ஆணையரும், கந்தர்வகோட்டை போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முற்றுகையிட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 100 நாள் வேலை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியதையடுத்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.