முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள கேளல் கிராமத்தில் உள்ள ஆயிரவள்ளி அம்மன் கோவில் ஆவணி மாத பொங்கல் முளைப்பாரி உற்சவ விழா நடைபெற்றது. இந்த கோவிலில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் விவசாயம் செழிக்க வேண்டியும், பருவ மழை பெய்ய வேண்டியும் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து, மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன பெண்கள் கும்மியடித்து கிராமத்தில் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்தனர். பின்னர் அய்யனார் கோவில் அருகே உள்ள கண்மாயில் முளைப்பாரியை கரைத்தனர். விழா ஏற்பாடுகளை கேளல் கிராம மக்கள் செய்திருந்தனர்.