கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே சந்தவாசலில் உள்ள பூவாத்தம்மன் கோவிலில் புதியதாக கட்டப்பட்ட நாகாத்தம்மன் கோவிலில் இன்று காலை மண்டலாபிஷேக பூஜை நடைபெற்றது.
இதையொட்டி 108 பெண்கள் பால்குடங்களுடன் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இரவில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. நாளை (வியாழக்கிழமை) இரவு நாடகம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.