தமிழகத்தில் மகளிர் மகப்பேறு நிதியுதவி திட்டம் நிறுத்தி வைக்கப்படவில்லை - சுகாதாரத்துறை

மகளிர் மகப்பேறு நிதியுதவி திட்டம் நிறுத்தி வைக்கப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2023-07-19 11:26 GMT

சென்னை,

மகளிர் மகப்பேறு நிதியுதவி திட்டம் நிறுத்தி வைக்கப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

தமிழகத்தில் மகளிர் மகப்பேறு நிதியுதவி திட்டம் நிறுத்தி வைக்கப்படவில்லை .மென்பொருள் பதிவேற்றத்தில் ஏற்பட்ட குறைபாடுகளால் காலதாமதம் ஆகிறது . தமிழக அரசின் 'PICME 2.0' இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்ய நடவடிக்கை. நிலுவையில் உள்ள மகளிருக்கு விரைவில் மகப்பேறு நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்