மகளிர் குழு தலைவி மர்ம சாவு

களக்காடு அருகே மகளிர் குழு தலைவி மர்மமான முறையில் இறந்து கிடந்ததார்.

Update: 2023-08-24 19:00 GMT

களக்காடு:

களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் காளிராஜ். இவருடைய மனைவி மகேஷ்வரி (வயது 40). இவர்களுக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இதில் காளிராஜ், அவரது 2 மகன்களும் மாற்றுத்திறனாளி ஆவார்கள். மகேஷ்வரி மகளிர் சுய உதவி குழு தலைவியாக இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கும், அவரது மகன்களில் ஒருவருக்கும் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மகேஷ்வரியின் தாயார் செல்வகனி அவர்களை கவனித்து வந்தார்.

நேற்று முன்தினம் மதியம் செல்வகனி வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். திடீர் என வீட்டுக்குள் இருந்து மகேஷ்வரியின் அலறல் சத்தம் கேட்டது. இதனால் பதறிய செல்வகனி வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மகேஷ்வரி தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். வீடு முழுவதும் மண்எண்ணெய் வாடை வீசியது. அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவில் மகேஷ்வரி இறந்தார்.

இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பச்சமால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷ்வரி மீது யாராவது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார்களா? அல்லது அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்