மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகள் தபால் அலுவலகங்களில் வங்கி கணக்கு தொடங்கலாம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன் பெறும் பயனாளிகள் தபால் நிலையங்களில் வங்கி கணக்கு தொடங்கலாம் என்று அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-06 19:00 GMT


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன் பெறும் பயனாளிகள் தபால் நிலையங்களில் வங்கி கணக்கு தொடங்கலாம் என்று அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை

சிவகங்கை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சிவகங்கை அஞ்சல் கோட்டத்தில் சுமார் 4,290 பயனாளிகளுக்கு வங்கி கணக்கு தொடங்க வேண்டி உள்ளது. இந்தத் திட்டத்தில் வருகிற 15-ந் தேதி முதல் பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ. 1,000 வரவு வைக்கப்பட உள்ளது. இதனால் இந்த திட்டத்தில் பயன்பெற உள்ள பயனாளிகள் வங்கி கணக்குகளை விரைவாக தொடங்க வேண்டும். இந்தத் திட்டத்தில் வங்கி கணக்கு தொடங்க தபால் அலுவலகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் பயன்பெற போகும் பயனாளிகளின் முழு விவரமும் தங்கள் பகுதிக்கு உட்பட்ட அஞ்சல் நிலையங்களில் உள்ளது. மேலும் அஞ்சல் துறை ஊழியர்கள் மற்றும் தபால்காரர்கள் தங்களுக்கு வங்கி கணக்கு தொடங்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்கள்.

வங்கி கணக்கு

எனவே பயனாளிகள் அனைவரும் தங்கள் பகுதிக்கு உட்பட்ட அஞ்சலகங்களை உடனே தொடர்பு கொண்டு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்குகளை வருகிற 9-ந் தேதிக்குள் தொடங்கி பயன் பெறலாம்.

இந்தத் திட்டத்தில் தகுதியுடைய பயனாளிகள் தங்கள் பெயரில் தபால் துறை மூலம் வங்கிக் கணக்கு தொடங்கினால் மட்டுமே மாதம் தோறும் இந்த தொகையை வங்கி கணக்கு வாயிலாக பெற முடியும். எனவே பயனாளிகள் அருகில் உள்ள தபால் அலுவலகங்களை அணுகி வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்