மகளிர் உரிமை தொகை திட்ட சிறப்பு முகாம்
மகளிர் உரிமை தொகை திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
ஆலங்குளம்,
ஆலங்குளம் பகுதிகளில் கலைஞரின் மகளிர் உரிமை தொகை திட்ட சிறப்பு முகாம் 25 மையங்களில் நடைபெற்றது. இதில் விடுபட்டு போன பொதுமக்களிடம் மனுக்கள் வாங்குவதற்காக ஆலங்குளம், ஏ.லட்சுமிபுரம். கீழாண்மறைநாடு, அப்பயநாயக்கர்பட்டி, கொங்கன்குளம், எதிர்கோட்டை, குண்டாயிருப்பு உள்பட 25 மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் கிராம நிர்வாக அதிகாரிகள், கிராம உதவியாளர்கள் மற்றும் கலந்து கொண்டனர். வெம்பகோட்டை தாசில்தார் ரெங்கநாதன், ஆலங்குளம் வருவாய் ஆய்வாளர் அறிவழகன் ஆகியோர் சிறப்பு முகாம்களை பார்வையிட்டனர்.