அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா

அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது.

Update: 2023-03-10 18:37 GMT

கரூர் அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் நேற்று கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சாமுவேல் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். மாலதி வரவேற்றார். மாவட்ட செயலாளர் மோகன்குமார் மகளிர் தின விளக்க உரையாற்றினார். மாநில துணைத்தலைவர் சங்கரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் மோகன், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்