வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத்தில் மகளிர் தின கொண்டாட்டம்

வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த மகளிர் தின கொண்டாட்டத்தில் மேயர் பிரியா, போலீஸ் இணை கமிஷனர் ரம்யா பாரதி உள்பட 5 பேருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

Update: 2023-03-08 04:22 GMT

வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனம், ''சர்வதேச மகளிர் தினம் 2023'' மற்றும் ''வேல்ஸ் மகளிர் சாதனையாளர் விருது 2023'' ஆகியவற்றை சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று கொண்டாடியது.

உலகெங்கிலும் உள்ள அனைத்து பெண்களின் சமரசமற்ற தியாகம் மற்றும் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி, முழு நிறைவுடனும், ஆர்வத்துடனும் நடந்தது. சர்வதேச மகளிர் தினம் 2023-ன் நிகழ்வில், தங்கள் துறையில் சிறந்து விளங்கிய 5 சிறந்த ஆளுமைகளுக்கு 'வேல்ஸ் மகளிர் சாதனையாளர் விருது 2023' வழங்கப்பட்டன.

பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ராஜன், சென்னை வடக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் ரம்யா பாரதி, சவீதா மருத்துவக் கல்லூரி இயக்குனர் டாக்டர் சவீதா ராஜேஷ், இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் சுதா கொங்கரா பிரசாத், காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன் ஆர்த்தி அருண் ஆகியோர் சாதனையாளர் விருது பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரும், வேந்தருமான ஐசரி கே.கணேஷ் சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார். இணைவேந்தர் ஆர்த்தி கணேஷ், வேல்ஸ் கல்விக்குழும துணைத்தலைவர் ப்ரீத்தா கணேஷ் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர். வளரும் பெண்களுக்கு ஊக்கத்துடன் செயல்பட உந்துதலாக அமைந்த இந்த நிகழ்வு, வேல்ஸ் மகளிர் சாதனையாளர் விருது பெற்றவர்களின் ஏற்புரையுடன் நிறைவடைந்தது. கணினி அறிவியல் துறை இணை பேராசிரியர் ஆர்.துர்கா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்