ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா
கலவை ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா நடந்தது.
கலவை
கலவை ஆதிபராசக்தி பொறியல் கல்லூரியில் மகளிர் தின விழா கல்லூரி தாளாளர் உமாதேவி தலைமையில் நடைபெற்றது. கல்லூரி பேராசிரியர் புவனா வரவேற்றார் பேராசிரியர் ஷர்மிளா முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர் ராஜேஸ்வரி பத்மநாபன், தமிழரசி ஆகியோர் கலந்து கொண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
இதில் யோகா மனவளபயிற்சி குறித்து எடுத்துரைக்கப்பட்டன. மாணவிகள் பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடத்தினர்.
இதில் கல்லூரி முதல்வர் கார்த்திகேயன், கல்லூரி செயலாளர் கருணாநிதி மற்றும் பேராசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் டாக்டர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.