மகளிர் தின விழா
கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.;
கமுதி,
கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சித்ராதேவி அய்யனார் தலைமையிலும் ஒன்றிய ஆணையாளர் மணிமேகலை முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.