அனைவருக்கும் 100 நாள் வேலை கேட்டு பெண் தொழிலாளர்கள் சாலை மறியல்
அனைவருக்கும் 100 நாள் வேலை கேட்டு பெண் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கடலூர் முதுநகர்,
கடலூர் முதுநகர் அருகே சேடப்பாளையம் கிராமத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைவருக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் (100 நாள் வேலை) வேலை கேட்டு பெண் தொழிலாளர்கள் நேற்று காலை கடலூர்- விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெண் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் போக்குவரத்து சீரானது.