சாராய பாக்கெட்டுகளை சாலையில் வீசிய பெண்கள்

மயிலாடுதுறை அருகே, விற்பனைக்காக வைத்திருந்த சாராய பாக்கெட்டுகளை சாலையில் வீசி எறிந்த பெண்கள், மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-10 18:45 GMT


மயிலாடுதுறை அருகே, விற்பனைக்காக வைத்திருந்த சாராய பாக்கெட்டுகளை சாலையில் வீசி எறிந்த பெண்கள், மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாராய விற்பனை

மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் கழுக்கானிமுட்டத்தை சேர்ந்தவர் தவமணி. இவருடைய மகள் சுபத்ரா. தாய்-மகள் இருவரும் வேப்பங்குளம் கருவக்காடு பகுதியில் தொடர்ந்து பல மாதங்களாக சாராய விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சாராயம் விற்றதாக தவமணி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரது மகள் சுபத்ரா, சாராய விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது.

சாலையில் வீசிய பெண்கள்

இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வேப்பங்குளம் பகுதி பெண்கள் நேற்று சாராய விற்பனை நடந்த இடத்திற்கு சென்று அங்கு விற்பனை செய்யப்பட்டு வந்த புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகளை எடுத்து சாலையில் வீசி எறிந்தனர்.

பின்னர் சாராய விற்பனையை கட்டுப்படுத்தாத போலீசாரை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக சாராய விற்பனை நடந்து வருவதாகவும், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு சாராய விற்பனையை தடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்