முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலம்

கடலாடியில் முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலமாக வந்தனர்.

Update: 2023-05-27 18:45 GMT

சாயல்குடி,

கடலாடியில் சத்திரிய நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன், மாரியம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா நடைபெற்றது.கடந்த 12-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. பின்பு கொடியேற்றம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. அம்மனுக்கு ஆயிரம் கண் பானை, அக்னி சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

கடலாடி மற்றும் சென்னை சத்திரிய நாடார்கள் உறவின்முறை, கடலாடி சத்திரிய நாடார்கள் வாலிபர் ஐக்கிய சங்கமும் இணைந்து நாட்டுப்புற கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில். திருவிளக்கு பூஜை, மஞ்சள் தண்ணீர் ஊற்றி நீராடுதல், உறியடித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் நிறைவாக பெண்கள் முளைப்பாரி எடுத்து கடலாடி நகர் முழுவதும் ஊர்வலமாக வந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொங்கல் கமிட்டியாளர்கள், கடலாடி சத்திரிய நாடார்கள் உறவின்முறை, சென்னை, கடலாடி சத்திரிய நாடார்கள் உறவின் முறை, கடலாடி சத்திரிய நாடார்கள் வாலிபர் ஐக்கிய சங்கம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்