பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்
பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
கோட்டைப்பட்டினம் ராம் நகரில் பிரசித்தி பெற்ற சோனை கருப்பன் மற்றும் ராக்காச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று பெண் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர் அந்த முளைப்பாரியை கடலில் கரைத்தனர்.