தனியார் நிதி நிறுவன பெண் ஊழியர் தற்கொலை

நன்னிலத்தில் தனியார் நிதி நிறுவன பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Update: 2023-04-12 18:59 GMT

நன்னிலம்;

நன்னிலத்தில் தனியார் நிதி நிறுவன பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

நிதி நிறுவன பெண் ஊழியர்

நாகை மாவட்டம் மருதூர் திருவண்காடு பகுதியை சேர்ந்தவர் செல்ல பாண்டியன். இவருடைய மகள் அர்ச்சனா(வயது24). இவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள எழில்நகரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிதி நிறுவனத்தின் பின்புறம் வாடகை வீட்டில் தனது தோழியுடன் தங்கி இருந்து பணிக்கு சென்று வந்த அர்ச்சனா நேற்று காலை வழக்கம் போல பணிக்கு சென்றாா். மதியம் சாப்பிட வீட்டுக்கு சென்ற அர்ச்சனா நீண்ட நேரம் கடந்த பிறகும் அலுவலகத்துக்கு திரும்பி வரவில்லை.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் அவரது தோழி வீட்டுக்கு சென்று பாா்த்தாா். அப்போது வீ்ட்டில் இருந்து மின்விசிறியில் அர்ச்சனா தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். தகவல் அறிந்த நன்னிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அர்ச்சனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர். இது குறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அச்சனா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்