மகளிர் சுயஉதவிக்குழு தயாரிப்பு பொருட்களின் விற்பனை கண்காட்சி

திருப்பத்தூரில் மகளிர் சுயஉதவிக்குழு தயாரிப்பு பொருட்களின் விற்பனை கண்காட்சியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

Update: 2023-08-31 17:49 GMT

விற்பனை கண்காட்சி

மகளிர் சுய உதவிக்குழு தயாரிப்புகளை கல்லூரி மாணவ, மாணவிகளிடம் கொண்டு செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தமிழகம் முழுவதும் 'கல்லூரி சந்தை' என்ற விற்பனை கண்காட்சியை நடத்தி, அதில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்தும் பணி அந்தந்த மாவட்டங்களில் தொடங்கி உள்ளது.

திருப்பத்தூரில் 7,750 மகளிர் சுய உதவிக்குழுக்கள் இயங்கி வருகிறது. இந்த குழுக்கள் உணவு பொருட்கள், அலங்கார பொருட்கள், கைவினை பொருள்கள், பாக்கு மட்டை, கைப்பை, சணல் பைகள், பொம்மைகள், தோல் பொருட்கள், கடலை எண்ணெய், இயற்கை சோப்புகள், சத்துமாவு, இட்லி பொடி உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

இந்த பொருட்களை கல்லூரி மாணவ-மாணவிகளிடம் கொண்டு சேர்க்கும் வகையில் திருப்பத்தூர் தனியார் கல்லுரியில் 'கல்லூரி சந்தை' நேற்று தொடங்கியது. இதில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிப்பு பொருட்கள் அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இதை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்து பார்வையிட்டு பாராட்டினார். இதற்கான ஏற்பாடுகளை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு செய்து இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்