காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம்
உவரியில் காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம் நடத்தினர்.
திசையன்விளை:
கரைசுத்து உவரி பஞ்சாயத்து பகுதிகளில் பல மாதங்களாக தாமிரபரணி கூட்டு குடிநீர் வழங்கப்படவில்லை என கூறியும், சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தியும் நேற்று கரைசுத்து உவரி பஞ்சாயத்து துணைத்தலைவர் ஆறுமுகராஜன் தலைமையில் பெண்கள் காலிகுடங்களுடன் உவரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த குடிநீர் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் பாக்கியராஜ், உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் நதியா மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் வருகிற 8-ந் தேதி முதல் குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.