டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;

Update: 2023-06-24 20:39 GMT

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் அருகே கோவில், மருத்துவமனை, பள்ளி ஆகியவை இயங்கி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் திடீரென டாஸ்மாக்கடை முன்பு கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்