டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-29 18:45 GMT

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரீதா தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் செல்வி, பச்சையம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் வளர்மதி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும், பால், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மீனாட்சி, உஷா மகேஸ்வரி, ஜெயக்கொடி மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்