பீர்பாட்டிலை உடைத்து பெண்கள் போராட்டம்

செஞ்சி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பீர்பாட்டிலை உடைத்து பெண்கள் போராட்டம் நடத்தினா்.

Update: 2023-02-23 18:45 GMT

செஞ்சி:

செஞ்சி அருகே பாலப்பாடியில் இருந்து கலத்தம்பட்டு செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகிலேயே கோவில் மற்றும் பள்ளியும் உள்ளன. எனவே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக நேற்றும் டாஸ்மாக் கடை முன்பு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில பெண்கள், டாஸ்மாக் கடைக்குள் சென்று பீர்பாட்டிலை எடுத்து கீழே போட்டு உடைத்தனர். மேலும் விற்பனையாளருடன் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து விற்பனையாளர், டாஸ்மாக் கடையை மூடிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் பெண்களும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நல்லான்பிள்ளைபெற்றாள் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்