குமரியில் மகளிர் போலீஸ் அதிரடிப்படை பிரிவு உருவாக்கம்

குமரியில் மகளிர் போலீஸ் அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-22 18:45 GMT

நாகர்கோவில், 

குமரியில் மகளிர் போலீஸ் அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மகளிர் அதிரடிப்படை

குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்காமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் போில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பெண் போலீஸ் அதிகாரிகள், பெண் போலீஸ் ஏட்டுகள் என மகளிர் மட்டும் அடங்கிய அதிரடிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இந்த அதிரடிப்படையானது பெண்கள் கூடும் இடங்களில் ஈவ்டீசிங் போன்ற பிரச்சினை நடைபெறாமல் தடுக்கவும், நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், பெண்கள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களின் போது பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த மகளிர் அதிரடிப்படையானது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தின் நேரடி மேற்பார்வையில் செயல்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்