போதை பொருள் ஒழிப்பு வாசகங்களுடன் பெண்கள் சைக்கிள் பேரணி

சென்னை நேப்பியார் பாலத்தில் இருந்து பூக்கடை வரையில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களுடன் பெண்கள் சைக்கிள் பேரணி நேற்று நடைபெற்றது.

Update: 2023-06-25 10:30 GMT

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் நாளை (திங்கட்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் நகர் முழுவதும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போலீஸ் துறை சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி போதை பொருட்களால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு மணற்சிற்பம் மெரினா கடற்கரையில் உருவாக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் கார்த்தி, நடிகை ஐஸ்வர்யா ரஜேஷ், மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சின்னத்திரை பிரபலம் ஈரோடு மகேஷ், பாடகர் கானா பாலா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிலையில் சென்னை நேப்பியார் பாலத்தில் இருந்து பூக்கடை வரையில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களுடன் பெண்கள் சைக்கிள் பேரணி நேற்று நடைபெற்றது. இந்த பேரணியை கூடுதல் போலீஸ் கமிஷனர் லோகநாதன், இணை கமிஷனர்கள் ரம்யபாரதி, திஷா மிட்டல், துணை கமிஷனர் ஸ்ரேயா குப்தா ஆகியோர் தொடங்கி வைத்து, அவர்களும் சைக்கிள் பேரணியில் பங்கேற்றனர்.

இப்பேரணியில் கலந்து கொண்ட பெண்கள், மாணவிகளுக்கு கூடுதல் கமிஷனர் லோகநாதன் சான்றிதழ்கள் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்