பெண்கள் பால் குடம் ஏந்தி ஊர்வலம்
சாத்திப்பட்டு நங்கை அம்மன் கோவிலுக்கு பெண்கள் பால் குடம் ஏந்தி ஊர்வலம்
பண்ருட்டி
பண்ருட்டி அருகே உள்ள சாத்திப்பட்டு கிராமத்தில் ஸ்ரீ நங்கையம்மன், ஸ்ரீ அஷ்டாதசபுஜ மகாலட்சுமி, துர்கா பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கெடிலம் நதிக்கரையில் இருந்து புனித நீர் கரகம் கொண்டுவரப்பட்டது. பின்னர் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் சுமந்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆளி வகையறாக்கள் மற்றும் கிராம வாசிகள் செய்து வருகின்றனர்.